மாறிவரும் நுகர்வோர்கள்!
சித்தார்த்தன் சுந்தரம்
|
|
இது ஆன்லைன்
ஷாப்பிங் யுகம்... இந்த யுகத்தில் நுகர்வோர்கள் எப்படி எல்லாம் மாறுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வது
சுவாரஸ்யமான விஷயம்!
தள்ளுபடியில்
பொருட்களை வாங்குவது அந்தஸ்த்தில் குறைவாகக் கருதப்பட்டு வந்த காலம் போய், தள்ளுபடிக்காகக் காத்திருக்கும் காலம் வந்திருக்கிறது. தள்ளுபடிக்காக வழக்கமாக வாங்கும் கடையில் வாங்காமல், வேறு கடையில் வாங்குபவர்களின் எண்ணிக்கை சுமார் 20% உயர்ந்திருக்கிறதாம்!
அதிகரிக்கும் ஆன்லைன் பர்ச்சேஸ்!
நுகர்வோர்களில் 41% பேர் பிரைவேட் லேபிள் (குறிப்பிட்ட கடையின் பெயரில் விற்பனை
செய்யப்படும் பொருட்கள். இவை அந்தக் கடையில் தவிர வேறெங்கும் கிடைக்காது!) பொருட்களைப் பயன்படுத்த
ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கு விலைவாசி உயர்வு ஒரு காரணம். தவிர, பிற கடைகளில் விற்கும் பொருட்களுக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை என்பது இன்னொரு காரணம்.
இந்தியாவில் 10 கோடிக்கும் மேலானவர்களிடம் இன்டர்நெட் வசதி உள்ளது. இதில் 50 சதவிகிதத்தினர் ஆன்லைனில் பொருட்களை வாங்குகிறார்கள். காலத்திற்கேற்பவும், பொருளாதார வசதிக்கேற்பவும் பொருட்களை வாங்கும் விதத்திலும் நுகர்வோர்கள் மாறிவருகிறார்கள்
என்பதையே இது காட்டுகிறது.
இந்தியாவின் மொத்த
உள்நாட்டு உற்பத்தியில் சில்லறை வணிகத்தின் பங்கு சுமார் 20%. வேலைக்குச்
செல்லும் இந்தியர்களில் 8% பேர் இந்த
வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்றைக்கு இந்தியச் சில்லறை வணிகத்தின் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட 500 பில்லியன் டாலர்கள் (ரூ.30 லட்சம் கோடி)!
பணப்புழக்கத்தால் மாற்றம்!
இந்திய
ஜனத்தொகையில் கிட்டத்தட்ட 30 கோடி மக்கள்
மத்தியதர வர்க்கத்தினர்; 50 கோடி மக்களின் வயது 25-க்கும் குறைவு. பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கை, உலகமயமாக்கல், தொழில்நுட்ப வளர்ச்சி
போன்றவற்றினால் வேலைவாய்ப்புகளும், வேலைக்குச் செல்பவர்களின் எண்ணிக்கையும், குறிப்பாக பெண்கள், தொடர்ந்து
அதிகரித்து வருகிறது. இதனால்
மக்களிடையேயான பணப்புழக்கத்திலும், வாங்கக்கூடிய பொருட்களிலும், அவைகளை வாங்கும் இடங்களிலும் கடந்த ஐந்து ஆண்டு காலமாகவே ஒரு மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
இளைஞர்களின் நிலை!
பலசரக்குக்
கடைகளில் பொருட்களை வாங்கிய நாம் இன்று சூப்பர் மார்க்கெட்களை நோக்கி மெல்ல மெல்ல மாறி வருகிறோம். ஆனால், இன்றைக்கும் எஃப்.எம்.சி.ஜி வணிகத்தைப் பொறுத்தவரை, 94% சிறிய அளவிலான பலசரக்குக் கடைகளின் கையில்தான் இருக்கிறது. சூப்பர் மார்க்கெட் போன்ற நவீன வர்த்தக நிறுவனங்கள்
மூலம் விற்பனையாகும்
பொருட்கள் வெறும் 6 சதவிகிதம்தான்.
ஆனால், இந்த நவீன வர்த்தக நிறுவனங்களுக்கே சவால்விடும் வகையில் இன்றைக்கு 'ஆன்லைன்’ வர்த்தகம் 15 வயதிலிருந்து 34 வயதுக்குட்பட்டவர்களிடையே வேகமாக பிரபலமாகி வருகிறது. ஆன்லைனில் பொருட்களை வாங்குபவர்களில் 75 சதவிகிதத்தினர் இந்த வயதைச் சேர்ந்தவர்கள்தான்.
சலுகைகள், வசதிகள்!
84 லட்சம் பலசரக்குக் கடைகளுக்கு மத்தியில் சுமாராக 10,000 சூப்பர் மற்றும் ஹைபர் மார்க்கெட்டுகள் உள்ளன. இதற்குச்
செல்பவர்களின் எண்ணிக்கையும்
நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப நுகர்வோர்கள் செலவழிக்கும் தொகையும் அதிகரித்து வருகிறது. இதற்குக்
காரணம், அனைத்துப் பொருட்களும் ஒரே
கூரையின் கீழ் கிடைக்கும் வசதியும், விழாக்காலச் சலுகைகளும்தான். ஜனவரி 26, ஆகஸ்ட் 15, மே 1 போன்ற பொதுவிடுமுறை
தினங்களன்று பெரும்பாலான சூப்பர் மற்றும் ஹைபர் நிறுவனங்கள் சிறப்பு சலுகைகள் மூலம் நுகர்வோர்களை கவர்ந்திழுக்கின்றன.
இன்டர்நெட், ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்துவரும் இந்நாளில் இ-காமர்ஸ், எம்-காமர்ஸ் என்கிற ஆன்லைன் வர்த்தகமும் நுகர்வோர்களிடையே
மிகவும் பிரபலமாகி
வருகிறது. வீட்டில் ஆண், பெண் இருவரும்
வேலைக்குச் செல்வதும், எரிபொருளின் விலை
அதிகரிப்பும், பணம்
செலுத்துவதற்கு பாதுகாப்பான 'கேட்வே’ வசதியை இந்த வலைதளங்கள்
அளிப்பதும் இம்மாதிரியான வர்த்தகம் பிரபலமாகி வருவதற்குக் காரணங்கள்.
பழக்கத்தில் மாற்றம்!
இன்றைக்கு இந்த
வலைதளங்களின் மூலம் என்ன பொருட்கள் வேண்டுமானலும் வாங்கக்கூடிய வசதி வந்துவிட்டது. முன்பு 'தொட்டுப் பார்த்து’ வாங்கக்கூடிய பொருட்களான
காய்கறிகள், துணிமணிகள்
போன்றவைகள்கூட இன்றைக்குத் தொடாமல் 'பார்த்து’ மட்டுமே (வலைத்தளத்தில்
அப்பொருட்கள் சம்பந்தப்பட்டப் படங்களின் அடிப்படையில்) வாங்க நுகர்வோர்கள் பழகிவிட்டார்கள்.
மாறும் டிரெண்ட்!
முன்பெல்லாம்
விலைஉயர்ந்த பொருளை வாங்கினால் அதை ஏறக்குறைய வாழ்நாள் வரை பயன்படுத்துவது வழக்கமாக இருந்தது. ஆனால், இன்றைக்கு, ஐஃபோன் 4 அறிமுகமாகி ஒரு சில
மாதங்களே ஆகியிருந்தாலும், அதை தந்துவிட்டு
தள்ளுபடி விலையில் ஐஃபோன் 5 sஸ¨க்கு தங்களை 'உயர்த்திக்கொள்ளும்படி’ ஆப்பிள் பொருட்களை சந்தைப்படுத்தும் நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது. அதற்கும் கூட்டம் அலைமோதுகிறது.
இன்னொரு டிரெண்ட்
என்னவெனில், ஒரு பொருளை
வாங்குவதற்கு முன்பு ஆன்லைனில் அதுபற்றிய தகவல்களைத் சேகரித்து அந்தப் பொருட்களைக் கடைகளுக்குச்
சென்று வாங்குவதும், கடைகளுக்குச் சென்று தேவையானப் பொருட்களைப் பார்த்துவிட்டு
வந்து விலை குறைவு என்கிற
காரணத்தினாலும், டோர் டெலிவரி வசதி
இருப்பதாலும் அந்தப் பொருட்களை ஆன்லைனில் வாங்கவும் செய்கிறார்கள்.
இந்தியாவில் இ-காமர்ஸ்!
இன்றைக்கு
இந்தியாவில் இந்த இ-காமர்ஸ் வர்த்தகம் ரயில் மற்றும் விமான டிக்கெட்டுகள் வாங்குவதற்கும், எலெக்ட்ரிக் பில், போன் பில் போன்றவைகள் கட்டுவதற்கும், புத்தகங்கள், துணிமணிகள், எலெக்ட்ரானிக் பொருட்கள், போன்கள் என அனைத்துப்
பொருட்களை வாங்குவதற்கும் வசதியாக இருக்கிறது. இதன்மூலம் உட்கார்ந்த இடத்தில் இருந்தே
ஒரு 'க்ளிக்’கில் பொருட்களை நமது இல்லத்துக்கு வரவழைக்க முடியும்.
'ஒர்க்லைஃப் பேலன்ஸ்’ என்பது குறித்து
அதிகமாகப் பேசப்பட்டு வரும் இந்த நாளில் ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதால் நேரம் மிச்சம் ஆகிறது.
மிச்சமாகும் நேரத்தை
குடும்பத்தினருடன் செலவிட முடிகிறது. இந்தியாவின் மொத்த இ-காமர்ஸ் வர்த்தகத்தில்
ஏறக்குறைய 24% 'காலில் வெந்நீர்
கொட்டியது’ போல எப்போதும்
பரபரப்பாக இருக்கும் மும்பை
நகரில் வசிக்கும் நுகர்வோர்களின் மூலம் கிடைக்கிறது என ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.
கலாசார மாற்றம்!
தெருமுனையில்
இருக்கும் நாயர் கடையில் ரூ. 5 க்கு டீ, காபி குடிப்பவர்கள்
இருக்கும் அதே நகரத்தில் கஃபே காபி டே, ஸ்டார்பக்ஸ், கோஸ்டா போன்ற காபி செயினில் பல
மடங்கு அதிகமாக செலவழித்து காபி, டீ குடிக்கும் இளைஞர் பட்டாளமும் இருக்கத்தான் செய்கிறது.
அதுபோல, சமீபகாலத்தில் பிரியாணி விற்கும் தொடர்கடைகளும் அதிகமாகிக்
கொண்டேவருகிறது. இதற்குக் காரணம், வீட்டு சமையலறைக்கு அடிக்கடி விடுமுறை அளித்துவிட்டு வெளியே சென்று சாப்பிடுவது போன்ற கலாசாரங்கள் அதிகரித்து வருவதுதான்!
கன்ஸ்யூமர் இஸ் கிங்!
இன்றைய
காலகட்டத்தில் தள்ளுபடி, பொருட்களில் வகைகள்
(ஸிணீஸீரீமீ) மற்றும் சிறந்த
சேவை போன்ற காரணிகள் நுகர்வோர்களின் நுகர்வுத்தன்மையை மாற்றி அமைக்கக்கூடிய வல்லமை கொண்டவைகளாக இருக்கின்றன. இன்றைக்கும், என்றைக்கும் 'கன்ஸ்யூமர் இஸ் கிங்’ என்பதில் மாற்றம்
எதுவும் இருக்கப்போவதில்லை.
நுகர்வோர்களிடையே
ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப பொருட்களை தயாரிப்பவர்களும், வர்த்தகர்களும்
தங்களை மாற்றிக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்!
No comments:
Post a Comment