`சிம்ம’த்தை லட்சினையாகக் கொண்ட
சிங்கள அரசுக்கே சிம்ம சொப்பனமான
’வேங்கை’களின் வேந்தன் நீ!
எட்டப்பன் `கருணா’வினால்
காட்டிக் கொடுக்கப்பட்ட இன்றைய
கட்டபொம்மன் நீ!
ஆட்சிகள் பல மாறினாலும்
காட்சிகள் மாறாததால்
ஆக்ரோஷம் ஆனவன் நீ!
ஈழத் தமிழனின் உரிமைக்காக
காந்தியத்தை கடந்து
நேதாஜியை நேசித்தவன் நீ!
சிங்கள அரசுகளின் கொடுமை தாங்காமல்
புலம் பெயர்ந்தவர்களின் மத்தியில்
பலம் கொண்ட மட்டும்
எதிர்த்து நின்றவன் நீ!
அரசியல் சுயநலத்திற்காக
அநேக `கருணா’க்கள் உன் பெயரை
உச்சரித்தாலும் அதை
உதாசீனம் செய்யாதவன் நீ!
தோட்டாக்களுடன் தோழமை கொண்டதனால்
தோட்டாவையே உன் தலையில் ஏற்று
வீர மரணம் அடைந்தவன் நீ!
`பாசிச’ பக்ஷேயின்
ராஜபாட்டையில் தர்மத்தின் தலைமகன்
புத்தனுக்கு ரத்தத்தில் அபிஷேகம்
பார்க்க இன்றில்லை நீ!
கலிங்கம் கண்டு மாறினான் அசோகன்
என்ன கண்டால் மாறுவான் இந்த
மகிந்தா?
புத்தனின் பூமியில்
புனர் வாழ்வுக்குக் கூட வழியின்றி
திக்கற்று நிற்கும் தமிழர்களுக்குத் தேவை
`கருணா’வற்ற இன்னொரு நீ –
காந்தியமாய்!
-(25/05/09)